உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போக்சோ குற்றங்கள் மாணவிக்கு தொல்லை; ஏட்டு கைது

போக்சோ குற்றங்கள் மாணவிக்கு தொல்லை; ஏட்டு கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 44; ஏட்டாக உள்ளார். மனைவி, குழந்தைகளுடன், ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கிறார். சாந்தி நகரில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். உறவினரின் மகள், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு, ஏட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார். மாணவி, தாயிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. மாணவி பள்ளியில், சக மாணவியரிடம் தெரிவித்தார். குழந்தைகள் நல அதிகாரிகள் புகாரின்படி, மகளிர் போலீசார், சசிகுமாரை போக்சோவில் கைது செய்தனர். 'சில்மிஷ' கண்டக்டருக்கு 'காப்பு' ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டைச் சேர்ந்தவர், 17 வயது மாணவி. இவர், திருவள்ளுவர் பல்கலை கழகத்தில் பி.காம்., படிக்கிறார். இவர், ஜூலை 17ல் சேர்க்காட்டில் இருந்து திருவலம் நோக்கி அரசு பஸ்சில் சென்றார். பஸ்சில், காட்பாடி அடுத்த ஜகுவபல்லியைச் சேர்ந்த காண்டீபன், 40, கண்டக்டராக இருந்தார். அவர் மாணவிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். காட்பாடி மகளிர் போலீசார், காண்டீபனை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ