உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரூ 5 கோடி மதிப்பு சிவன் கோவில் நிலம் மீட்பு; அறநிலையத்துறை நடவடிக்கை

ரூ 5 கோடி மதிப்பு சிவன் கோவில் நிலம் மீட்பு; அறநிலையத்துறை நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான சிவன் கோவில் நிலம் மீட்கப்பட்டது.திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரத்தில், தகிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான 37 சென்ட் நிலம், திருச்செந்தூர் முக்கிய சாலையையொட்டி உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 5 கோடியாகும். தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த நிலத்தை நேற்று ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, தாசில்தார் வள்ளிநாயகம் , ஆய்வாளர் பர்வீன் பாபி ஆகியோர் தலைமையில் ஹிந்து அறநிலையத்துறை ஊழியர்கள் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. சிவந்திபட்டி போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஆரூர் ரங்
பிப் 14, 2025 13:57

ஆக்கிரமித்திருந்த காலத்துக்கான குத்தகை வாடகையை அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன் ஆக்கிரமிப்பு செய்தவரின் விவரங்களை வெளியிட வேண்டும்.


Tetra
பிப் 14, 2025 12:04

தீச்சட்டியில் இருந்து தீக்குள் போன மாதிரிதான்


Dhinesh
பிப் 14, 2025 09:58

அப்படியே அறநிலையத்துறை நாமக்கல் மாவட்டம் பரமத்தி -ல் உள்ள கோட்டையண்ண சுவாமி கோவில் நிலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கோட்டையையும் மீட்டெடுத்தால் மிகச் சிறப்பு தான்......நடக்குமா


Tetra
பிப் 14, 2025 12:06

தமாஷ்தான்


Barakat Ali
பிப் 14, 2025 09:54

வேண்டாத கட்சிகள், பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செஞ்சிருந்தா அதை மட்டும் மீட்டு ஸ்டிக்கர் ஒட்டிக்குவோம் .....


v narayanan
பிப் 14, 2025 09:08

நாகூர் வேளாங்கண்ணி இவைகளில் இந்துக்களுக்கு வேலை கிடைக்குமா .ஆய்வாளர் எப்படி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் .அவர் எப்படி சிவன் சொத்தை மீட்பார் ?.மதசார்பற்ற என்ற வார்த்தை இந்து கோவில்களுக்கு மட்டும் தான் பொருந்தும் .ஏன் சமத்துவ கிறிஸ்துமஸ் சமத்துவ ரம்ஜான் கொண்டாடப்படவில்லை ?.


R Vijayaraghavan
பிப் 14, 2025 08:22

பர்வீன் பாபி எப்படி ஹிந்து அறநிலையத்துறையில் வேலை செய்ய முடியும். அவர் எந்த மதத்தை சேர்ந்தவர். விளக்கம் வேண்டும்


crap
பிப் 14, 2025 09:13

ஆய்வாளர் - காவல்துறை


V வைகுண்டேஸ்வரன்
பிப் 14, 2025 12:20

பர்வீன் பாபி எப்படி ஹிந்து அறநிலையத்துறையில் வேலை செய்பவர் அல்ல. செய்தியை ஒழுங்கா படிங்க. பர்வீன் பாபி ஆய்வாளர், அதாவது போலீஸ் இன்ஸ்பெக்டர்.


VENKATASUBRAMANIAN
பிப் 14, 2025 07:32

யார் அந்த தனியார். இதை ஏன் மூடி மறைக்க வேண்டும். இதனால்தான் சந்தேகம் வலுக்கிறது.


அம்பி ஐயர்
பிப் 14, 2025 07:28

இத்தனை காலமாக அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது யார்.... யார்....??? அவர்கள் பெயர் என்ன....??? அவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன....???? திருட்டுப் பொருளை மீட்டுவிட்டோம் என்று தம்பட்டமடிக்கும் திராவிட மாடல் அரசு... அதைத் திருடியவன் யார் அவன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும்.... செய்யுமா இந்த அரசு....


Kasimani Baskaran
பிப் 14, 2025 06:45

பல லட்சம் கோடி சொத்துக்கள் களீபரம் செய்யப்பட்டுள்ளது. அரை ஏக்கர் நிலம் கூட கிடையாது... அதை மீட்டார்களாம்... வெட்கக்கேடு.


Venkateswaran Rajaram
பிப் 14, 2025 06:27

அந்த தனியார் யார் என்றால் இரண்டு திராவிட கொள்ளைக்கார கூட்டங்களில் ஏதாவது ஒன்றாக இருக்கும். இவர்கள் பொத்தாம் பொதுவாக தனியார் என்று சொல்லி மக்களிடம் மறைத்து விடுகிறார்கள். இந்த திராவிட கொள்ளை கூட்டங்கள் அரசியல் இல்லாத நபரிடம் இத்தனை நாள் விட்டு வைப்பார்களா...


baala
பிப் 14, 2025 09:37

அதை எதிர்க்கட்சிகள் கண்டுபிடித்து அவர்களை கேள்வி கேட்கலாம் / ஆர்ப்பாட்டம் நடத்தலாம். / மக்களுக்கு அவர்கள் யார் என்று தெரியப்படுத்தலாம். ஏனென்றால் அவர்களும் கொள்ளை அடித்தவர்கள் தானே/ வருங்களில் கொள்ளை அடிக்க போகிறவர்கள் தானே. மொத்தமாக எந்த அரசியல்வாதி யோக்கியன் என்று சொல்ல முடியுமா? எல்லா அரசியல்வாதிகளும் திருட்டு ஜென்மங்கள். நாம் தான் பாவம். ஈதரைகளுக்கு பரிவாக பேசி நம் வாழ்க்கையை பற்றி நினைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்.


சமீபத்திய செய்தி