உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கள்ள நோட்டு வழக்கில் சிவகாசி வாலிபர் கைது

கள்ள நோட்டு வழக்கில் சிவகாசி வாலிபர் கைது

திருநெல்வேலி: நாங்குநேரி அருகே வாகன சோதனையில் ரூ. 75 லட்சம் கள்ள நோட்டுகளுடன் மூவர் சிக்கிய வழக்கில் சிவகாசியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலிமாவட்டம் மூன்றடைப்பு அருகே போலீசார் கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் ஆக. 6ல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் நோக்கி சென்ற காரில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பிடிபட்டது. காரில் வந்த சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த சீமைச்சாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதைநாச்சியார் புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவத்தில் கள்ளநோட்டு டிசைன் செய்து அச்சடித்து கொடுத்து மூளையாக செயல்பட்ட சிவகாசி பள்ளப்பட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த அங்குசாமி மகன் சேர்ந்த ராஜேந்திரன் 38, என்பவரை போலீசார் நேற்று விருதுநகரில் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை