மேலும் செய்திகள்
புல்வெளியில் தீ
24-Jun-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காப்புக்காடு அருகே இரவில் மேய்ச்சல் நிலத்தில் திடீரென காட்டுத்தீ பரவியது. மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காப்புக்காடு பள்ளிக்கோட்டை அருகே கால்நடை மேய்ச்சல் நிலத்தில் நேற்று முன்தினம் இரவில் காட்டுத்தீ பரவியது. உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலர் பர்னபாஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் பள்ளிக்கோட்டை கிராமத்து மக்களும் இணைந்து தீயை அணைத்தனர். காட்டுப்பகுதிக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
24-Jun-2025