உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாமனார், மாமியார் வெட்டிக்கொலை மருமகன் கைது

மாமனார், மாமியார் வெட்டிக்கொலை மருமகன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் மாமனார் மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி அருகே ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 55. மனைவி செல்வராணி 53. இவர்களது மகள் ஜெனிபர் 30. ஜெனிபர் அதே பகுதியைச் சேர்ந்த மரியகுமார் என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 வயதில் மகன், 8 வயதில் மகள் உள்ளனர். மரியகுமார் நிரந்தரமாக வேலைக்கு செல்லவில்லை. குடிப்பழக்கம் இருந்தது.குடும்ப பிரச்னையில் கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். மரியகுமார் அதே பகுதியில் தனியே வசித்தார். ஜெனிபர், பெங்களூருவில் பணிக்கு சென்று விட்டார். குழந்தைகள் இருவரையும் ஜெனிபரின் பெற்றோர் கவனித்தனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஆரோக்கியநாதபுரம் வீட்டில் இருந்த மாமனார் பாஸ்கர், மாமியார் செல்வராணி ஆகியோரிடம் மரியகுமார் வாக்குவாதம் செய்தார்.இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டு முற்றத்தில் இறந்தனர்.அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மரியகுமாரை விரட்டினர். அவர் ஆயுதத்தை வீசிவிட்டு ஓடிவிட்டார். அவரை பெருமாள்புரம் போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tiruchanur
ஜன 21, 2025 09:25

இதுதான் கிறிஸ்தவம் காட்டும் வழி. இப்படியே எல்லா கிறிஸ்தவனும் பண்ணினா நாட்டுக்கு நல்லது


நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:52

டாஸ்மாக் கொண்டுவந்த தலைவர் வாழ்க, சாதாரண குடிமகனுக்கும் குடிப்பழக்கம் செல்லவேண்டும் என்று கடினமாய் உழைத்த அந்த தலைவருக்கு என்று சிலைகளை நிறுவுவோம், அவரது இந்த கடின உழைப்புக்கு ஊதியமாய் அவரது சந்ததியினருக்கு முதல்வர் பதவியினை பரிசாக கொடுப்போம்


புதிய வீடியோ