உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரூ.276 கோடி பாக்கி ரத்து செய்ய வேண்டும் கேட்கிறார் சபாநாயகர்

ரூ.276 கோடி பாக்கி ரத்து செய்ய வேண்டும் கேட்கிறார் சபாநாயகர்

திருநெல்வேலி : கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது போல அரசு போக்குவரத்துக்கழகம் டோல்கேட்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவுவிடம், தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.276 கோடி டோல்கேட்டுக்கு பாக்கி வைத்திருப்பதால் பஸ்களை அனுமதிக்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர், என்ன சூழலில் ஐகோர்ட் அவ்வாறு உத்தரவிட்டது என தெரியவில்லை. தமிழகத்தில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுகிறது. பெண்கள் கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக்கழகம் லாப நோக்கமின்றி செயல்படுகிறது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. எனவே அதை போல போக்குவரத்து கழகத்தின் நிலுவையை தள்ளுபடி செய்ய வேண்டும். இருப்பினும் தமிழக முதல்வர், முறையாக நடவடிக்கை எடுப்பார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஜூலை 10, 2025 17:48

சபா நாயகர் அப் பாவி சொல்வது இப்படித்தானிருக்கும்


N Srinivasan
ஜூலை 10, 2025 13:18

சொத்து வரி கட்டவில்லை என்றால் விடு மற்றும் கடைகளை சீல் வைத்து மிரட்டுவது போல தான் இதுவும். தனக்கு வந்தால் ரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி


மதுரை வாசு
ஜூலை 10, 2025 10:19

மத்திய அரசு கார்பரேட் கம்பெனிகளின் கடனை ரத்து செய்ததுபோல் தமிழக போக்குவரத்துகழகத்தின் டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். அதன்பின்பு கடனுக்கு ஈடாக கார்பரேட் கம்பெனிகளின் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் விட்டு கடன் தொகையை மீட்பதுபோலவே தமிழக அரசு பஸ்களையும் ஜப்தி செய்து போது ஏலத்தில் விற்று பாக்கியை வசூல் செய்யனும். ஆனால் என்ன பிரச்சினை என்றால் காயலாங்கடை பஸ்கள் அவ்வளவு விலைக்கு போகாது. அதனால் மீதமுள்ள பாக்கி தொகைக்கு இந்த சபாநாயகர் அய்யாவுவின் சொத்தை விற்று ஈடு செய்யலாம்


Haribabu Poornachari
ஜூலை 10, 2025 10:03

ஸ்டாலின் குடும்ப சொத்தில் இருந்து இதை கட்டலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை