வாலிபருடன் டூவீலரில் சென்ற மாணவி பலி
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இன்ஸ் டாகிராம் மூலம் அகரகட்டுவைச் சேர்ந்த கோகுலுடன் 24, நட்பு ஏற்பட்டது. அக்., 5 மாலை கோகுலுடன் டூவீலரில் குற்றாலம் ரோட்டில் சென்றார். வளைவில் டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இதில் மாணவி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோகுல் காயம் அடைந்தார். இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மாணவியை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரித்தார். சிறுமியின் இறப்பிற்கு காரணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி சிறுமியின் குடும்பத்தார், உறவினர்கள் நேற்று செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். விபத்துக்கு பிறகு வாலிபர் தலை மறைவாகி விட்டார்.