உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தொன்மை இரும்பு உருக்காலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

தொன்மை இரும்பு உருக்காலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் கல்லத்திகுளத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொல்லியல் துறை மாணவர்கள், தென்காசி மாவட்டம் கல்லத்திகுளத்தில் உள்ள மலைப் பாங்கான பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், இரும்பாலைகள் இருந்ததற்கான எச்சங்களாக பழங்கால இரும்புக் கசடுகள் மற்றும் மண் குழாய்கள் பரவலாகக் கிடைத்தன. அவற்றை ஆய்வுக்கு சேகரித்துக் கொண்டனர். பேராசிரியர் சுதாகர் தலைமையிலான ஆய்வில், இவை சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்தையோ அதற்கு அடுத்தகாலத்தையோ சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, பொருநை நாகரிகம் உலோகவியல் தொழில்நுட்பத்தில் மேம்பட்டிருந்ததை உறுதி செய்கிறது. இருப்பினும் முறையான ஆய்வுக்குப் பின் அவற்றின் காலம் தொன்மை குறித்து தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ