உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பட்டியலின வாலிபரை கொன்றவர்கள் சிக்கினர்

பட்டியலின வாலிபரை கொன்றவர்கள் சிக்கினர்

திருநெல்வேலி:ராதாபுரம் அருகே பட்டியலின வாலிபர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபு தாஸ், 27; கார்பெண்டர். நேற்று முன்தினம் ஒருவர் வேலைக்கு கூப்பிட்டதால், டூ-வீலரில் தமிழரசன் என்பவருடன் பிரபு தாஸ் சென்றார். அவரை ஒரு கும்பல் தாக்கி, கழுத்தறுத்து கொலை செய்தது. தமிழரசனும் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை விபத்து என போலீசார் தெரிவித்தனர். பிரபுவின் உறவினர்கள், இது கொலை என்றும், அவர் மீது கொலை முயற்சி நடந்த போதே ராதாபுரம் போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., சிலம்பரசன் தலைமையி ல் போலீசார் விசாரித்தனர். பிரபு தாஸை, வேலைக்கு வரவழைத்து நடுக்காட்டில் கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. அந்த கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். விசாரணைக்கு பின், விபரம் தெரியவரும் என, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ