உள்ளூர் செய்திகள்

பெண்ணின் தந்தை கைது

சுர்ஜித்தின் தந்தை, தாய் இருவரும் போலீஸ் எஸ்.ஐ.,கள். சம்பவத்தின் போது அவர்கள் அங்கு இல்லை. அவர்கள் துாண்டுதலுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே அவர்களை கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டினர். இருப்பினும் அவர்களை கைது செய்தால் தான் உடலை பெறுவோம் என கவின் குடும்பத்தினர் தெரிவித்ததால் நேற்று இரவு எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KR india
ஜூலை 31, 2025 03:50

கொலை செய்யப்பட்ட கவின் என்பவருக்கு ஆழ்ந்த இரங்கல். ஒரு குற்றம் நடந்தால், சம்பவத்தில் ஈடுபட்ட, குற்றவாளியை மட்டுமே கைது செய்ய வேண்டும். கொலை செய்தது தவறு தான். குற்றம் தான். குற்றம் செய்த, இவர்களது மகன் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்திலும் ? அடைக்கப்பட்டுள்ளதாக செய்தி கூறுகிறது குண்டர் சட்டம், என்பது, தொடர் குற்றம் செய்தவர்களுக்கு தானே ? அந்த பையன் மேல், இதற்கு முன்பே, வேறு அடிதடி வழக்குகள் இருக்கிறதா என்று தகவல் இல்லை ? காவல்துறை உதவி இன்ஸ்பெக்டர்-ஆக பணியாற்றி வரும் தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்தில் இல்லை என்றும், அவர்கள் இந்த கொலையை செய்யவில்லை, அவர்கள் மகன் தான் செய்தான் என்றும் தெரிய வந்த பின், இவர்களை ஏன் கைது செய்ய வேண்டும். உள்நாட்டு பாதுகாப்புக்கு, இரவு, பகல் பாராமல், காவல் பணியில் ஈடுபட்டு வரும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்-க்கே இந்த நிலைமையா ? என்பதை எண்ணி வருந்துகிறேன். நம் சட்டத்தின் கருவே, ஆயிரம் குற்றவாளிகள் கூட தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான். எனவே, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களையும், அவர் மனைவியையும், விடுவிக்க வேண்டும். நன்றி