நாய்க்கடிக்கு மருந்து இல்லை சபாநாயகர் தொகுதியில் அவலம்
திருநெல்வேலி: திசையன்விளையில் நாய் கடித்த மூதாட்டியை சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது அதற்கான மருந்து இல்லை எனக் கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் சத்தியகனி 63. இவரை தெரு நாய் கடித்து விட்டது. திசையன்விளையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு நாய்க்கடிக்கு ஊசி போட மருந்து இல்லை எனக் கூறி தற்காலிகமான வலி நிவாரண மருந்தை ஊசி மூலம் செலுத்தினர். பின்னர் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினர். திசையன்விளை மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உள்ளது. ஆனால் டிரைவர் இல்லாததால் திசையன்விளை த.வெ.க., நிர்வாகிகள் சத்தியகனியை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர். திசையன்விளை சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியாகும்.