உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வீரவநல்லூரில் ஐம்பெரும் விழா

வீரவநல்லூரில் ஐம்பெரும் விழா

வீரவநல்லூர் : வீரவநல்லூரில் ஐம்பெரும் விழா நடந்தது.வீரவநல்லூரில் சவுராஷ்டிரா கலைமகள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ஆண்டு விழா, மத்திய சபா நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, ஊக்க பரிசுகள் வழங்கும் விழா, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழா, தர்மசீலர்களுக்கு பாராட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு சவுராஷ்டிரா சபா தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இந்திரா மழலையர் பள்ளி தாளாளர் விஜயரெங்கன், அய்யா பாகவதர் முன்னிலை வகித்தனர். ரெங்கன் வரவேற்றார். ராமசாமி பாகவதர், டவுன் பஞ்., தலைவர் ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ராமலிங்கம், செயலர் ஆனந்தராமன், கிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி பேசினர். அகில இந்திய சவுராஷ்டிரா மத்திய சபா தலைவர் சாந்தாராம் உதவித் தொகை வழங்கினார். 107 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகளை வெங்கிடாலம் தொகுத்து வழங்கினார். அறங்காவலர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ