உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கீழப்பாவூரில் மரக்கன்று நடும் விழா

கீழப்பாவூரில் மரக்கன்று நடும் விழா

பாவூர்சத்திரம் : கீழப்பாவூரில் மரக்கன்று நடும் விழா நடந்தது.பாவூர்சத்திரம் சென்ட்ரல் லயன்ஸ் சங்கமும், எக்ஸ்னோராவும் இணைந்து கீழப்பாவூர் யூனியன் சாலையில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். விழாவிற்கு யூனியன் சேர்மன் காமராஜ் தலைமை வகித்தார். டாக்டர் சவுந்தரபாண்டியன், ஞானசெல்வன், குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட லயன்ஸ் தலைவர் இளங்கோ வரவேற்றார்.எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் டாக்டர் விஜயலட்சுமி மரக்கன்றுகளை வழங்கினர். லயன்ஸ் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் சுப்பையா பாண்டியன், பட்டயத் தலைவர் பாலசுப்பிரமணியன், நல்லாசிரியர் மதனசிங், ஆசிரியர் கலைச்செல்வன் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் டாக்டர் கதிரேசன் கீழப்பாவூர் யூனியன் சாலையில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கீழப்பாவூர் டவுன் பஞ்.,தலைவர் பொன் அறிவழகன், கவுன்சிலர் தங்கசாமி, தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன், வட்டார அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் பால்துரை, திராவிட கழக மாவட்ட தலைவர் டேவிட் செல்லத்துரை, தொழிலதிபர் கணேசன், ராமச்சந்திரன், அருள்செல்வன், நல்ல சமாரியன் டிரஸ்ட் நிறுவனர் சோபனா மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.லயன்ஸ் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை