மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
குற்றாலம் : 'எழுத்தாளர் நலவாரியம் அமைக்க வேண்டும்' என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 11வது மாநாடு இலஞ்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கர் தலைமை வகித்தார். வேதமூர்த்தி முன்னிலை வகித்து வரவேற்றார். ஆதவன், தட்சண்யா, கிருஷி கருத்துரை வழங்கினார். 'தமிழிசை' என்ற தலைப்பில் கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடையார், கலைமான், கோமதி, சரவணா, செல்வி, சுதா, அருண்பாரதி கவிதை வாசித்னர். கீர்த்திகா, கவுசல்யா நடனம் ஆடினார்.புத்தக கண்காட்சிக்கு லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். ராஜசேகர் துவக்கி வைத்தார். ஓவிய கண்காட்சிக்கு சேதுராஜ் தலைமை வகித்தார். நடராஜன் திறந்து வைத்தார். கவிதை கண்காட்சிக்கு ராஜையா தலைமை வகித்தார். பேராசிரியர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.ஓவியர் நீலமணியின் கம்பி சிற்பங்களுக்கு ரகுபதி தலைமை வகித்தார். முருகன் திறந்து வைத்தார். குறும்பட குறுந்தகடு கண்காட்சிக்கு சண்முகவாசன் தலைமை வகித்தார். பேராசிரியர் கோமதிநாயகம் துவக்கி வைத்தார். உதவி குறும்படத்தை மாரியப்பன் வெளியிட பொன் சிவக்குமார் பெற்றுக் கொண்டார். புகைப்பட கண்காட்சிக்கு மதியழகன் தலைமை வகித்தார். பாம்பே ஸ்டோர்ஸ் அதிபர் ராமலிங்கம் திறந்து வைத்தார். கார்ட்டூன் கண்காட்சிக்கு மனோகரன் தலைமை வகித்தார். செந்தில்வேல் துவக்கி வைத்தார்.மாநாட்டில், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். எழுத்தாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். அனைத்து பொது நூலகங்களுக்கும் புதிய புத்தகம் வாங்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்லூரிகளில் தமிழ் மொழியை முதல் மொழிபாடமாக இயற்ற வேண்டும். வயது முதிர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சியில் நாறும்பூநாதன், வடிவேல், உதயசங்கர், ஓவியர்கள் மாரியப்பன், செல்வம், வின்சென்ட், செந்தில்வேல், சாமி, சார்லஸ், முகம்மதுஅலி, வசந்தா மற்றும் வரவேற்புக்குழு கார்த்தி, வேல்முருகன், சண்முகவாசன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணன் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025