உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வள்ளியூர் கோயிலில் பந்தல் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்

வள்ளியூர் கோயிலில் பந்தல் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்

வள்ளியூர் : வள்ளியூர் அய்யன் கோயிலில் பந்தலில் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.வள்ளியூர் அய்யன் கோயில் கொடைவிழா கடந்த 22ம் தேதி துவங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று நடக்க இருந்த அன்னதான நிகழ்ச்சிக்காக பந்தல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பந்தல் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதுகுறித்து வள்ளியூர் மற்றும் நான்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர்கள் வள்ளியூர் ராபின்டேனியல், நான்குநேரி சண்முகவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விவேகானந்தன், வானுமாமலை, ரெங்கதுரை, பொன்னுதுரை, பட்டுசீனிவாசன், இருதயராஜ், வெங்கடேஷ், ராஜா, மைக்கேல் ஆகியோர் விரைந்து வந்து கட்டடங்களில் சமையல் வேலை செய்வதற்காக தங்கியிருந்த 5 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டு, பின்னர் கடும் போராட்டத்திற்கு பின் பந்தலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.இச்சம்பவத்தில் பந்தல் முழுவதும் எரிந்து சாம்பலாயின. மேலும் அன்னதானத்திற்கு சமையல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி உட்பட பலசரக்கு சாமான்கள், காய்கறிகள், இலைகள் போன்றவைகளும் எரிந்து நாசமாயின. இச்சம்பவத்தில் சுமார் ரூ.1 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ