மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
அம்பாசமுத்திரம் : அயன்சிங்கம்பட்டியில் விதை கிராம திட்டத்தின் கீழ் விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.திருநெல்வேலி துணை வேளாண்மை இயக்குனர் குமாரசாமி தலைமை வகித்தார். அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கம் வரவேற்றார். முகாமில், தரமான விதைகளின் குணங்கள் பற்றி விளக்கி கூறப்பட்டதுடன், விதை உற்பத்திக்காக விதை பண்ணைகளை அமைக்கும் முறை, ஆரோக்கியமான விதைகளை உற்பத்தி செய்ய ஏக்கருக்கு ஒரு சென்ட் பரப்பு தேவை. அதற்காக 17 சதவீத விதைகள் வேளாண்மை துறை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி முட்டை மிதப்பு சோதனை மூலம் திரட்சியான, வீரியமுள்ள நெல் விதைகளை தேர்வு செய்யும் முறையை செயல் விளக்கமாக செய்து காண்பித்தார். உதவி வேளாண்மை அலுவலர்கள் ராசாமி, சாந்தி உட்பட முன்னோடி விசாயிகள் நூறு பேர் கலந்து கொண்டனர்.துணை வேளாண்மை அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025