உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் இலவச நோட்டு புத்தகம், சீருடை வழங்கும் விழா

நெல்லையில் இலவச நோட்டு புத்தகம், சீருடை வழங்கும் விழா

திருநெல்வேலி : நெல்லையில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.நெல்லை ஜங்ஷனில் தாம்பிராஸ் மற்றும் தினமலர் சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. விழாவிற்கு பிஎஸ்என்எல்.,பத்மநாபன் தலைமை வகித்தார். பாஸ்கர வாத்தியார், கோபாலகிருஷ்ணன், கண்ணன் முன்னிலை வகித்தனர். ஐஸ்வர்யா கணேசன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக நெல்லை தினமலர் தினேஷ் சுப்பிரமணியன் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். மேலும் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவிகள் சிந்தூரி, பிரகதீஸ் ஆகியோருக்கு சிறப்பு பரிசு மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.விழாவில் ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் கணபதி சுந்தரம், ஜூபிடர் ராமசாமி அய்யர், மணி, மகாதேவன், நவநீதகிருஷ்ணன், ரேவதி, கொட்டாரம் கணேசன், ஹரி, சிவக்குமார், நடராஜன், குழந்தை நாராயணன், பவாணி கணேசன், சித்ரா ஸ்ரீதர், மணிகண்டன், மடத்து கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.தாம்பிராஸ் ராஜூ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ