உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயிலில் முளைக்கூட்டு திருவிழா துவக்கம்

வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயிலில் முளைக்கூட்டு திருவிழா துவக்கம்

திருநெல்வேலி : வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயிலில் ஆடி மாத முளைக்கூட்டு திருவிழா நேற்று துவங்கியது.வண்ணார்பேட்டையில் பழமைவாய்ந்த பேராத்துச் செல்வி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆடி மாத முளைக்கூட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று (1ம் தேதி) மாலை 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், 2ம் தேதி நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனையும், 3ம் தேதி காலை 10 மணிக்கு அம்பாள் முளைப்பாரியுடன் திருவீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கட்டளைதாரர் ராஜாமணி, ஆறுமுகம், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி