மேலும் செய்திகள்
பெண் டாக்டர் பலாத்காரம்; போலீஸ்காரர் சிக்கினார்
29-Apr-2025
திருநெல்வேலி:திருநெல்வேலியில் தி.மு.க., ஒன்றிய பொருளாளர் செல்வசங்கர் 45, வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்து சென்ற மூவரை போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த செல்வசங்கர் ஒன்றிய தி.மு.க. பொருளாளராக உள்ளார். மனைவி சரஸ்வதி ஊராட்சி ஒன்றிய தி.மு.க., கவுன்சிலர். மே 14 நள்ளிரவு டூவீலரில் சென்ற 4 வாலிபர்கள் இவரது வீடு மீது பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினர். பின் அவர்கள் மறுநாள் அதிகாலை திருநெல்வேலி -- நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் தளபதி சமுத்திரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டி ரூ.20,000 த்துடன் பணப்பையை பறித்து சென்றனர். அவர்களை ஏர்வாடி போலீசார் தேடி வந்தனர்.அதே 4 பேர் கும்பல் சம்பவ நாளுக்கு முதல் நாள் இரவு 12:45 மணிக்கு திருநெல்வேலி டவுனில் ஒரு டூவீலர் ஷோரூம் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இச்சம்பவங்கள் குறித்து திருநெல்வேலி போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.விசாரணையில் அக்கும்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் விடுதியில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு அவர்களை கைது செய்தனர். மேலநத்தம் பொன்ராஜ் 19, பொன்னாகுடி இசக்கிமுத்து 19, முத்துகுமார் 18, ஆகியோரை கைது செய்து தலைமறைவான பொன்னாகுடி கார்த்திக்கை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
29-Apr-2025