வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கட்டாய காத்திருப்பு உறுதி
மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளார். நேற்று மாலை அவர் அலுவலகத்தில் இருந்தபோது மாநகராட்சியில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ளும் அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோக்குமார் சந்திக்க வந்துள்ளார்.அவர் லஞ்சம் கொடுக்க வந்ததை அறிந்த கமிஷனர் தாக்கரே, போலீஸ் கமிஷனர் மூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். மாநகராட்சி அலுவலகத்திற்கு போலீசார் வரும் முன் அசோக்குமார் தப்பினார். அந்நிறுவன ஊழியர்களான சக்திவேல், ஆனந்த் பாபு, முகமது யூனோஸ் ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.இம்மாநகராட்சியில் பல்வேறு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் முறையாக பணியாற்றாத நிலையில் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து சரி கட்டுகின்றனர். அண்மையில் நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சில திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் வந்துள்ளது தெரியவந்துள்ளது.லஞ்ச புகாரை கைவிடும்படி தாக்கரேவிற்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்துள்ளது. இருப்பினும் அவர் போலீசில் அளித்த புகாரை திரும்ப பெற மறுத்து விட்டார்.
கட்டாய காத்திருப்பு உறுதி
29-Sep-2025
25-Sep-2025