மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
குற்றாலம் : குற்றாலத்தில் இன்று (24ம் தேதி) ஆணழகன் போட்டி நடக்கிறது.குற்றாலம் சாரல் திருவிழா நேற்று கலைவாணர் கலையரங்கில் துவங்கியது. இரண்டாவது நாளான இன்று (24ம் தேதி) ஆணழகன் போட்டி நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி விஜயராகவன் தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசுகிறார்.நெல்லை தலைமை நீதித்துறை நடுவர் நசீர்அகமது, இந்தியன் பாங்க் மண்டல மேலாளர் பஸ்லூர் ரஹ்மான் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு நாட்டுபுற கலைஞர்கள் நலவாரிய செயலாளர் முத்து வரவேற்கிறார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராம்நாத், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சவுந்திரராஜன், மருத்துவம் மற்றும் குடும்பநல துணை இயக்குநர் சுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் மீராமுகைதீன், கலுசிவலிங்கம் மற்றும் பஞ்., துணைத் தலைவர் ராமையா, பஞ்., உறுப்பினர் மாடசாமி வாழ்த்துரை வழங்குகின்றனர்.மாலை 5 மணிக்கு கலைக்குழு நடனம், 7 மணிக்கு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்ச்சி, 8 மணிக்கு நாட்டிய பாய்ஸ் கலைஞர்கள் பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குற்றாலம் டவுன் பஞ்.,செயலாளர் ராஜையா நன்றி கூறுகிறார்.
29-Sep-2025
25-Sep-2025