உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / புளியங்குடியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்

புளியங்குடியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்

புளியங்குடி : புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பழனி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் சங்கர் சீனிவாசன் வரவேற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், அதனை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் ஆசிரியர்கள் குமரேசன், கண்ணன், தெட்சிணாமூர்த்தி, செந்தில் முருகன், சுப்பையா, சசிகுமார் பேசினர். தொடர்ந்து என்.எஸ்.எஸ்.மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனர்.ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்.அலுவலர் சங்கர் சீனிவாசன் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை