மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
முக்கூடல் : புதுப்பட்டி கருத்தப்பாண்டி, சுடலைமாடசாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.பாப்பாக்குடி யூனியன் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கருத்தப்பாண்டி, சுடலை மாடசாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு முதல்நாள் காலை மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், லட்சுமி, நவக்கிரக ஹோமம், மதியம் சிறப்பு தீபாராதனை, மாலையில் விக்னேஷ்வர பூஜை, கடம் யாகசாலை, முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது.மறுநாள் அதிகாலை விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் காலை யாகசாலை பூஜை, காலை 10 மணிக்கு கருத்தப்பாண்டி, சுடலைமாடசாமி, பேச்சியம்மன், பிரம்ம சக்தியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
29-Sep-2025
25-Sep-2025