உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சாம்பவர்வடகரையில் இன்று பா.ஜ., தெருமுனை பிரசார கூட்டம்

சாம்பவர்வடகரையில் இன்று பா.ஜ., தெருமுனை பிரசார கூட்டம்

பாவூர்சத்திரம் : சாம்பவர்வடகரையில் இன்று (24ம் தேதி) பா.ஜ.,தெருமுனை பிரசார கூட்டம் நடக்கிறது.சாம்பவர்வடகரையில் பா.ஜ.,சார்பில் இன்று (24ம் தேதி) மாலை 6 மணிக்கு விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு தங்கம் தலைமை வகிக்கிறார். நகர தலைவர் ராமராஜ், ஒன்றிய இளைஞரணி வேல்சாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகிக்கின்றனர். செங்கை ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்கிறார்.மாநில பேச்சாளர் கணேசன், மாநில பிரசார குழு தீனதயாளன், பொது செயலாளர் சுடலையாண்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துராஜ், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் அன்புராஜ் பேசுகின்றனர். ராஜசேகர், கடல்ராஜன், கண்ணன், மாரியப்பன், சீனிவாசன், சுடலைக்கண்ணன், ராமர், செல்லமாரி, ராம்நாதபோஸ், சாரதா பாலகிருஷ்ணன், ராமராஜா, குமரேசசீனிவாசன், பாலகுருநாதன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.சரவணன் நன்றி கூறுகிறார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை