மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி நகரை சேர்ந்தவர் மீரான் (55). இவர் கடையத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு தனியார் பஸ் ஒன்றில் விக்கிரமசிங்கபுரம் சென்று கொண்டிருந்தார். தான் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வரும் முன் பஸ்சில் இருந்து இறங்குவதற்காக பஸ் படிக்கட்டிற்கு வந்துள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டிலிருந்து மீரான் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த மீரான் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025