உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திரவியநகரில் விழிப்புணர்வு கூட்டம்

திரவியநகரில் விழிப்புணர்வு கூட்டம்

பாவூர்சத்திரம் : திரவியநகரில் மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.திரவியநகரில் மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மருத்துவ காப்பீட்டு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பெத்தநாடார்பட்டி அன்னை தெரசா சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் நடந்த கூட்டத்திற்கு அரியப்புரம் பஞ்., வார்டு உறுப்பினர் செல்லம்மாள் தலைமை வகித்தார். மரகதம், பாரதஅமுதா, பாப்பா, குத்தாலிங்கம், சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மதிவேந்தன் வரவேற்றார்.சமூக சேவை நிறுவனத்தின் தலைவர் அந்தோணிராஜ் மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களை பயன்பெற விளக்கம் செய்தார். ஜெயசிங் மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பயனாளிகளுக்கு வழங்கினார். ஜெபராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்