உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பள்ளியில் இருபெரும் விழா

பள்ளியில் இருபெரும் விழா

திருநெல்வேலி : ராஜவல்லிபுரம் அமுதா நர்சரி பள்ளியில் இருபெரும் விழா நடந்தது.ராஜவல்லிபுரம் அமுதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ஆகிய இருபெரும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சண்முகையா தலைமை வகித்தார். குப்பக்குறிச்சி மகளிர் சுய உதவிக்குழு தலைவி புஸ்பராணி திருவிளக்கு ஏற்றினார். பள்ளி மாணவன் பிரவின்குமார் வரவேற்றார். மாணவர்கள் இறைவணக்கம் பாடினர். காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நடந்தது. இதில் மாணவி இந்திரா முதல் இடத்தையும், மாணவர் கணேசன் 2ம் இடத்தையும் பிடித்தனர்.திரைப்பட நடிகர் இசககிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவன் சுந்தர மகாலிங்கம் நன்றி கூறினார்.விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியை சுசிலா, பிரசன்னா, அனிதா, சுதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை