உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவிடம் அமைக்க வலியுறுத்தல்: எம்பி.,திருமாவளவன் பேட்டி

தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவிடம் அமைக்க வலியுறுத்தல்: எம்பி.,திருமாவளவன் பேட்டி

திருநெல்வேலி : தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு தமிழக அரசு நினைவிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி.,திருமாவளவன் கூறினார்.நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி.,திருமாவளவன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. உயிர் நீத்த 17 பேருக்கு தமிழக அரசு நினைவிடம் அமைக்க வேண்டும். மாஞ்சோலை மட்டுமல்ல அனைத்து தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தாழையூத்தில் பஞ்.,தலைவி கிருஷ்ணவேணியை தாக்கியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.

தென்மாவட்டங்களில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. அப்போது தனித்தொகுதியில் போட்டியிடும் தலித் சமூகத்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். வெற்றிபெறும் பஞ்,.தலைவர்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.சுப்ரீம் கோர்ட் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். முதலாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உடனே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 26ம் தேதி சென்னையில் கல்வியாளர்களை வைத்து கருத்தரங்கு நடத்தப்படுகிறது. 28ம் தேதி சமச்சீர் கல்வியை வலியுறுத்தி தமிழ் அறிஞர்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.குன்னூர் வெலிங்கடனில் 25 இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இப்பயிற்சியை உடனே இந்திய அரசு நிறுத்த வேண்டும். இதை நிறுத்துவதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி