மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி : இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் நாளை (4ம் தேதி) சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் குற்றாலம் அருவி ரோட்டரி சங்கம் சார்பில் இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளியில் நாளை (4ம் தேதி) மாலையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. செங்கோட்டை நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டல் பவிதா தலைமை வகிக்கிறார். வக்கீல்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு குறித்து பேசுகின்றனர்.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள ஜீவனாம்சம் பெறவும், மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழவும், மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் நஷ்டஈடு பெறவும், மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றவியல் வழக்குகளில் சிக்குண்டு வசதியின்மையால் வழக்கீல் வைத்துக்கொள்ள இயலாதவர்கள் இலவசமாக வக்கீல் வைத்துக் கொள்ள முகாமில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் நிலம், வீடு, பாகப்பிரிவினை, பணம் கொடுக்கல், வாங்கல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமையியல் வழக்குகளை நடத்தவும், வரதட்சணை கொடுமைகளுக்கு ஆளாக்கியவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும், தொழிற்சாலைகளில் விபத்துக்குள்ளாவோர் நிர்வாத்திடம் நஷ்டஈடு பெறவும், சிறையில் வாடும் கைதிகளுக்கு ஜாமின் கிடக்கவும், வழக்காடவும் உதவி செய்யப்படும்.
29-Sep-2025
25-Sep-2025