மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
வள்ளியூர் : ராதாபுரத்தில் இயங்கி வரும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை இணை இயக்குனர் அலுவலகமாக தரம் உயர்த்தவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சருக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும்தான் கடற்கரை மீனவ கிராமங்கள் உள்ளது. கடற்கரை மீனவ கிராமங்களில் வாழும் மீனவ மக்களின் நலன்கருதி ராதாபுரத்தில் மீன்வளத்துறையின் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மீனவ மக்கள் தங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெற்று கொள்வதற்காகவும், தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்திடவும் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீன்வளத்துறையின் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று வரவேண்டுமென்றால் ஒருநாள் ஆகிறது. மீன்பிடித்தொழில் செய்துவரும் மீனவமக்கள் தூத்துக்குடி சென்றுவர மிகவும் சிரமப்படுவதால் ராதாபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை இணை இயக்குனர் அலுவலகமாக தரம் உயர்த்தவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சருக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
29-Sep-2025
25-Sep-2025