மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி : குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு எக்ஸ்னோரா சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. குற்றாலத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலும் மரங்கள் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளுக்கு தென்காசி சிட்டி எக்ஸ்னோரா மற்றும் சுகுணா பவுல்ட்ரி பார்ம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார். கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலை வகித்தார். 5 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி சுற்றுலா பயணிகளுக்கு ஆயிரம் துணிப்பைகளை வழங்கினார்.
மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் சங்கர நாராயணன், சிட்டி எக்ஸ்னோரா நிர்வாகிகள் ராசிசுரேஷ், கணேசன், துரைமீனாட்சிநாதன், திருமலைமுருகன், வல்லம் முருகன் கார்த்திக், இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முத்தையா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முத்துசாமி, ஆழ்வார்குறிச்சி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, இலஞ்சி ஆர்.பி.பள்ளி பசுமைப்படை, என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Sep-2025
25-Sep-2025