மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : ஊர்திப்படி உயர்வு மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படாததால் போக்குவரத்து கழகம் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி முதலில் 50 ரூபாயாகவும், பின்னர் 150 ரூபாயாகவும், தொடர்ந்து 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள், அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் மாற்று திறனாளிகளுக்கு ஊர்திப் படி 300 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல், அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உத்தரவு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் இவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, அரசு துறைகளை போல் அரசு போக்குவரத்து கழகங்கள், பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உயர்த்தப்பட்ட ஊர்திப் படி உட்பட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
29-Sep-2025
25-Sep-2025