மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : எம்.எட் உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆணை வெளியிட்டதற்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் சண்முகப்பாண்டியன் தெரிவித்ததாவது: அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் எம்.எட்/எம்.பில் போன்ற உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வுகளுடன் பல ஆண்டுகள் முதுகலை ஆசிரியராக பணியாற்றி அப்பணியை துறந்து தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இத்தகைய ஆசிரியர்களுக்கு அவர்கள் முன்பு தனியார் பள்ளிகளில் இறுதியாக பெற்று வந்த ஊதியம் அரசு பள்ளிகளில் சேர்ந்த பின்பு அனுமதிக்கப்படாமல் தொடக்க நிலை ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.எனவே, இவர்களுக்கு அரசு பள்ளிகளில் எம்.எட்/எம்.பில் போன்ற உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வுகளும் தொடக்க நிலை ஊதியத்துடன் சேர்த்து அனுபவம் மிக்க தலைமை ஆசிரியர்களால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்தகைய முதுகலை ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளி பணிக் காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை/சிறப்பு நிலை வழங்க கோரும் கருத்துருக்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு முறையாக அனுப்பபட்ட போது தற்போது அரசு பள்ளிகளில் வழங்கபட்டுள்ள ஊக்க ஊதிய உயர்வுகள் இரண்டாவது முறை வழங்கப்பட்டதாகவும், அதனை அரசு கணக்கில் திரும்ப செலுத்தினால் மட்டுமே தேர்வு நிலை/சிறப்பு நிலை வழங்க இயலும் எனவும் கூறி அத்தகைய கருத்துருக்கள் முதன்மை கல்வி அலுவலரால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பி அனுப்பபட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நெல்லை மாவட்ட அமைப்பின் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலரின் தடை ஆணைகள் மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகளை பிடித்தம் செய்து வெளியிட்ட ஆணைகள் அனைத்தையும் ரத்து செய்து ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகையை ஆணைகளின் அடிப்படையில் தொகை ஏதும் பிடித்தம் செயது அரசு கணக்கில் செலுத்தப்பட்டிருப்பின் அதனை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் திரும்ப பெற்று கொள்ளும் வகையிலும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக உரிய நடவடிக்கை மேற்கொண்ட பள்ளிக் கல்வி இயக்குனர், சங்க மாநில தலைவர் மணிவாசகன் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
29-Sep-2025
25-Sep-2025