உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாணவி தற்கொலை முயற்சி இருவர் மீது வழக்குப்பதிவு

மாணவி தற்கொலை முயற்சி இருவர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி : பாளை. அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக இல்லக்காப்பாளர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: பாளை. அருகே ஆணையார்குளம் உடல் ஊனமுற்றோர் இல்லத்தில் செல்வமணி(18) என்ற மாணவி தங்கியுள்ளார். இவர் தந்தை கணபதி மும்பையில் உள்ளார். செல்வமணி பாளை. கல்லூரியில் பட்டப்படிப்பு முதல் ஆண்டு வகுப்பில் படித்து வருகிறார். சம்பவத்தன்று செல்வமணி மற்றும் சில மாணவிகளை இல்லக்காப்பாளர் மரியம்மாள், கட்டட பணியாளர் ரஞ்சி ஆகியோர் அழைத்து மாதக்கட்டணம் செலுத்தும்படி கூறினர். மாதக்கட்டணம் செலுத்தாதவர்களை இருவரும் திட்டினர். இதனால் மனமுடைந்த செல்வமணி கடந்த 28ம்தேதி 10 மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மயங்கி விழுந்த அவர் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செல்வமணி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பொன்னரசு, சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி விசாரணை நடத்தி காப்பாளர் மரியம்மாள், ரஞ்சி மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ