உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கீழக்கலங்கலில் நிவாரண நிதி வழங்கல்

கீழக்கலங்கலில் நிவாரண நிதி வழங்கல்

வீரகேரளம்புதூர் : கீழக்கலங்கலில் இடிதாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை தாசில்தார் வழங்கினார்.வீ.கே.புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் கடந்த ஏப்ரல் மாதம் சண்முகநல்லூரில் மழைக்காக ஒதுங்கி நின்றபோது இடிதாக்கி இறந்தார். இவரது மனைவி சின்னத்தாய் கடந்த மாதம் கீழக்கலங்கலில் நடந்த மனுநீதி நாள் முகாமில் அரசு உதவி கேட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தார்.அவரது உத்தரவின் பேரில் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை வீ.கே.புதூர் தாசில்தார் சுமங்கலி சின்னத்தாயிடம் வழங்கினார். நிகழ்ச்சியின் போது துணைத் தாசில்தார்கள் சிவசுப்பிரமணியன், பால்துரை, வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், சுப்பிரமணியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை