மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
புளியங்குடி : சீரான குடிநீர் வினியோகம் வேண்டி புளியங்குடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பகுதியில் உள்ள கற்பகவீதி இரண்டாம் தெருவை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சீரான குடிநீர் வினியோகம் வேண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சியில் ஆணையாளர் இல்லாததால் மேலாளரிடம் தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.'தங்கள் வசிக்கும் தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சுமார் 3 மாத காலமாக சீரான குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை மனுவை அளித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
29-Sep-2025
25-Sep-2025