மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : நெல்லை, பாளை., பகுதிகளில் ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டம் விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டம் வரும் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. பாளை., ஐகிரவுண்டு மகாராஜநகர் மகாதேவ சுவாமி கோயிலில் அன்று காலை 7 மணி முதல் 8.45 மணி வரை ஆவணி அவிட்டம் நடக்கிறது. நெல்லை ஜங்ஷன் சன்னியாசிகிராமம் விவேகசம்வர்த்தினி சபாவில் காலை 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் யஜூர் ஆவணி அவிட்டத்தை ஹரிராஜசேகர வாத்தியார் நடத்திவைக்கிறார். தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்கும், குறிச்சி கிருஷ்ணன் கோயில் தெருவில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளாகவும், நெல்லை ஜங்ஷன் விவேக சம்வர்த்தினி சபாவிலும், பகல் 11 மணி முதல் 2 மணி வரை மணக்கரை கிராமத்திலும் ரிக் வேத ஆவணி அவிட்டத்தை மணக்கரை நாராயணன் சாஸ்திரிகள் நடத்தி வைக்கிறார்.
பாளை., கொட்டாரம் கிராமத்தில் அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் யஜூர் வேத முறையிலும், 6.30 முதல் 7.30 மணி வரை ரிக் வேத முறையிலும் நடக்கிறது. பாளை., கே.டி.சி நகர் இஸ்மாயில்நகர் பிளாட் நம்பர் 13ல் டி.வி.கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் காலை 7.45 மணி முதல் 9 மணி வரை யஜூர் வேத முறையிலும், திம்மராஜபுரம் பெருமாள்கோயில் தெருவில் காலை 9.30 மணி முதல் 11 மணி வரையிலும், பாளை., ராமசாமி கோயில் மணி ஐயர் மெஸ்சில் காலை 11.30 மணி முதல் 1 மணி வரையிலும் யஜூர் வேத முறையில் நடைபெறும். ஆவணிஅவிட்டத்தை மேலப்பாட்டம் கொட்டாரம் ராமசுப்பிரமணிய வாத்தியார் நடத்திவைக்கிறார்.
நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் வரசித்திவிநாயகர் கோயிலில் காலை 6.30 முதல் 9.30 மணி வரையிலும், கைலாசபுரம் கைலாசநார் கோயிலில் காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டத்தை ராமகிருஷ்ண வாத்தியார் நடத்திவைக்கிறார். நெல்லை ஜங்ஷன் கண்ணம்மன் கோயிலில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், சுத்தமல்லி கோமதிநகரில் காலை 8.30 மணி முதல் 10 மணி வரையிலும், கங்கைகொண்டான் பெருமாள் கோயிலில் காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும் யஜூர் ஆவணி அவிட்டத்தை சுத்தமல்லி சீனிவாச வாத்தியார் நடத்திவைக்கிறார். குறுக்குத்துறை படித்துறையில் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டத்தை டவுன் ராஜகோபால தீட்சதர் நடத்திவைக்கிறார்.
பாளை., மார்க்கெட் திரிபுராந்தீஸ்வரர் கோயில் தெருவில் காலை 9 முதல் 10.30 மணி வரையில் யஜூர் வேத ஆவணி அவிட்டத்தை நெல்லை டவுன் ஹரிஹர சுப்பிரமணிய தீட்சதர் நடத்துகிறார். நெல்லை டவுன் செக்கடி சாஸ்தா கோயிலில் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் யஜூர் வேத ஆவணி அவிட்டத்தை நெல்லை டவுன் கண்ணன் சாஸ்திரி நடத்திவைக்கிறார். குறுக்குத்துறையில் பகல் 11 மணி முதல் 12.30 மணி வரையிலும் ரிக், யஜூர் ஆவணி அவிட்டங்களை டவுன் ராமசாமி வாத்யார், சீனிவாச வாத்தியார் நடத்துகின்றனர். என்.ஜி.ஓ.காலனி கிளை வேதவியாசா டிரஸ்ட் நீலகண்டநகரில் காலை 9 மணிக்கு யஜூர் வேத ஆவணிஅவிட்டத்தை பாஸ்கர் வாத்தியார் நடத்திவைக்கிறார். வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோயிலில் காலை 7.30 மணி முதல் 10.30 மணிக்குள் ரிக், யஜூர் வேத ஆவணிஅவிட்டம் நடக்கிறது. வண்ணார்பேட்டை நாராயணன் வாத்தியார் நடத்திவைக்கிறார்.
29-Sep-2025
25-Sep-2025