உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மூவரின் தூக்கு தண்டனையை ரத்துசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்

மூவரின் தூக்கு தண்டனையை ரத்துசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி : மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நெல்லை ஜங்ஷனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் கண்மணி மாவீரன் வரவேற்றார். கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில செயலாளர் நெல்லையப்பன், மாநில பேச்சாளர் காளிமுத்து, தமிழர்களம் தலைவர் அரிமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில ஓவியரணி துணை செயலாளர் முதல்வன், மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் கிங் தேவந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ