உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தென்காசியில் பா.ம.க.ஆர்ப்பாட்டம்

தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தென்காசியில் பா.ம.க.ஆர்ப்பாட்டம்

தென்காசி : தென்காசியில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட பா.ம.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகச்சாமி யாதவ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் குலாம், தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகசுந்தரம், காளிராஜ், நகர செயலாளர் மசூது முன்னிலை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் சித்திக் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் திருமலைக்குமாரசாமி யாதவ், மாவட்ட தலைவர் சேதுஅரிகரன் சிறப்புரையாற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மீரான், இஸ்மாயில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் செழியன், ஒன்றிய மகளிரணி செயலாளர் விஜயா கனகராஜ், குருதி கொடை கழகம் குமார், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கோபால், அழகப்பன், முரளிகுமார், மாரியப்பன், டான்ஸ் மைதீன், ராமநாதன், சிங்காரவேல், குமாரசாமி, காளிசெல்வம், இசக்கியம்மாள், ராணி, சந்திரா, ஆறுமுகம், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் ராசம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை