உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா

தென்காசி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா

தென்காசி : தென்காசி பகுதி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ராமர், செல்வக்குமார் வாழ்த்தி பேசினர். மாணவர் அப்துல்லா நன்றி கூறினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பாக்கியநாதன் செய்திருந்தார்.

* தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றார். ஆசிரியர்கள் லட்சுமணன், ஈசாக், சண்முகசுந்தரம், செல்வநாயகி, சுப்புசெல்வி, பிருந்தா, அகிலா, பாலா, செல்வராணி, திருப்பதி ஆசிரியர் தின உரையாற்றினர். மாணவ, மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

* கீழப்புலியூர் இந்து மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி ஆசிரியர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மாணவி கற்பகவள்ளி வரவேற்றார். தலைமையாசிரியர் சேகர் வாழ்த்தி பேசினார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ