உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசியில் ஆண் உடல் மீட்பு

தென்காசியில் ஆண் உடல் மீட்பு

தென்காசி : தென்காசியில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது. தென்காசி-ஆய்க்குடி ரோட்டில் முந்திரி தோட்டத்தில் ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த நபருக்கு 35 வயது இருக்கலாம். அவர் முந்திரி மரத்தில் கயிறு மூலம் தூக்குபோட்டு இறந்துள்ளார். இறந்து 6 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகி விட்டது. மேலும் தூக்கு கயிறு அறுந்து உடல் தரையில் கிடந்தது. சிமென்ட் கலர் சட்டை, பச்சை-மஞ்சள் கலந்த நிறமுடைய பேண்ட் அணிந்திருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி தென்காசி போலீசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்தனர். டி.எஸ்.பி.பாண்டியராஜன், இன்ஸ்பெக்டர் திருப்பதி சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் உதவியாளர் விஸ்வா முன்னா முகமது ஆய்வு செய்தார். அரசு டாக்டர் பாபுசங்கர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கேயே உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை