உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு புலவனூரில் 3 பேர் கைது

சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு புலவனூரில் 3 பேர் கைது

ஆழ்வார்குறிச்சி : புலவனூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். புலவனூரில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் நடந்தது. சிலை ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும் போது புலவனூர் பொன்மலைநகரை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் சின்னத்துரை (எ) யாக்கோபு, சேர்மக்கனி மகன் கண்ணன், பொன்னையாநாடார் மகன் பால்துரை ஆகியோர் ஊர்வலத்திற்குள் ஒரே பைக்கில் வேகமாக வந்து சக்திவேல் என்பவரை இடித்து காயப்படுத்தி ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். புலவனூர் பொன்மாமலைநகர் சுப்பிரமணியநாடார் மகன் சக்திவேல் புகாரின் பேரில் கடையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் மேல் விசாரணை செய்து 3 பேரையும் கைது செய்து அம்பை கோர்ட்டில் ஆஜர் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை