மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற மாணவர்களின் பங்கு அவசியம் என டவுனில் நடந்த சிறப்பு கருத்தரங்கில் நேரு யுவகேந்திரா மண்டல இயக்குநர் சதாச்சரவேல் தெரிவித்தார். எம்.டி.எஸ். அகாடமி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், டவுன் மந்திரமூர்த்தி பள்ளி சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 'வேரும் விழுதும்' என்ற சிறப்பு கருத்தரங்கம் டவுனில் நடந்தது. கரத்தரங்கிற்கு எம்.டி.எஸ்., அகாடமி மதிப்புறு செயலர் டாக்டர் சேயோன் தலைமை வகித்தார். டவுன் மந்திரமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி வரவேற்றார். சென்னை வஉசி., நற்பணி மன்ற தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் முரளீதரன், அரசப்பப்பிள்ளை நூற்றாண்டு துவக்க விழா மலரை வெளியிட, நெல்லை தொழிலதிபர் சங்கர திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். விழாவில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நேரு யுவகேந்திரா மண்டல இயக்குநர் சதாச்சரவேல் பேசியதாவது; நம் நாட்டில் ஏராளமான தலைவர்கள் தோன்றி மறைந்தாலும், அவர்களிலில் முதலில் நினைவுக்கு வரக்கூடியவர்கள் ஆசிரியர்கள் ஆவர். இதனால் கொண்டே நம் முன்னோர்கள் தாய், தந்தைக்கு அடுத்தபடியாக ஆசிரியருக்கு மரியாதை வழங்கினர். மாணவர்கள் தாய், தந்தை, ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்தை மதிக்க வேண்டும். நம் நாடு அனைத்துதுறைகளிலும் முன்னேற மாணவர்களின் பங்கு அவசியமாகும். வாழ்க்கையில் கஷ்டம், துன்பம் வரும். ஆனால் மாணவர்கள் அதனை பொருட்படுத்தாது முன்னேறினால் மட்டுமே நல்ல நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு சதாச்சரவேல் பேசினார். விழாவில் அஞ்சல் துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, மின்வாரிய ஓய்வு பெற்ற தலைமை இன்ஜினியர் சுப்பிரமணியன், நெல்லை நேருயுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சந்திரன், பிஎஸ்என்எல்., ஓய்வு பெற்ற பொது மேலாளர் ராஜேஸ்வரி முருகன், மந்திரமூர்த்தி பள்ளி ஆசிரியர்கள் ஜெயராஜ், செல்வகணபதி, பள்ளி மாணவர் அகமது இப்ராஹிம், மாணவி சிவரஞ்சனி உட்பட பலர் பேசினர். இதில் முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை நேருயுவகேந்திரா தேசிய இளைஞர்படை முத்து துரை நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025