உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆலங்குளத்தில் குடிநீர் இணைப்பு பெறஆக.2ல் கட்டணம் செலுத்த வேண்டும்

ஆலங்குளத்தில் குடிநீர் இணைப்பு பெறஆக.2ல் கட்டணம் செலுத்த வேண்டும்

ஆலங்குளம்:ஆலங்குளத்தில் வீட்டுக்குடிநீர் இணைப்பு பெறுவதற்கு வரும் 2ம் தேதி முதல் டவுன் பஞ்., அலுவலகத்தில் டி.டி. செலுத்தலாம் என டவுன் பஞ்.,தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-ஆலங்குளம் டவுன் பஞ்., பகுதியில் புதிய வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணைப்பு வேண்டுவோர் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு 3 ஆயிரத்து 60 ரூபாயும், வணிகம் மற்றும் தொழில்கூடங்களுக்கு 6 ஆயிரத்து 60 ரூபாயும் 'செயல் அலுவலர், டவுன் பஞ்., அலுவலகம், ஆலங்குளம்' என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஆலங்குளத்தில் மாற்றத்தக்க டி.டி.எடுக்க வேண்டும்.டி.டி.யை வரும் 2ம் தேதி முதல் டவுன் பஞ்., அலுவலகத்தில் வழங்கலாம். மக்களின் வசதிக்காக அலுவலகத்தில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்படும். டி.டி.யை காலை 11 மணி முதல் 2 மணிவரை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். 'டிடி'யுடன் 2011-12ம் ஆண்டு சொத்துவரை ரசீதை இணைத்து வழங்க வேண்டும். குடிநீர் இணைப்பை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இணைப்பு வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து டவுன் பஞ்., தலைவர் சொக்கலிங்கம், செயல் அலுவலர் திருமலை, குடிநீர் வடிகால்வாரிய பொறியாளர் முத்துராஜ், டவுன் பஞ்., கவுன்சிலர்கள் பழனிசங்கர், பொறியாளர் ஆவுடைபாண்டி ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை