மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
குற்றாலம்:குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.குற்றாலம் சாரல் திருவிழாவின் 7ம் நாளான நேற்று மாலையில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. பழையகுற்றாலத்தில் நடந்த இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை குற்றாலம் சப்-இன்ஸ்பெக்டர் சிவன், ஹில்டன் பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தனர்.நடுவர்களாக ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் ராஜாலட்சுமணன், வீரபாகு, வேலுச்சாமி செயல்பட்டனர். 5வது வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான போட்டியில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீராம் முதலிடமும், இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சீமைசோமு இரண்டாமிடமும், பாளை., புஷ்கலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மனோசந்தோஷ் ராஜ் மூன்றாமிடமும் பெற்றனர்.ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான போட்டியில் பாளை.,பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் அபிசேக் முதலிடமும், ஜெயேந்திரா சுவாமிகள் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகேஷ்ராம் இரண்டாமிடமும், டான் பாஸ்கோ பள்ளி மாணவர் யாசர் மூன்றாமிடமும் பெற்றனர்.பொது ஆண்களுக்கான ஒரு பிரிவு போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவா முதலிடமும், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர் ராகேஷ் இரண்டாமிடமும், தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மகராஜா மூன்றாமிடமும் பெற்றனர். மற்றொரு பிரிவில் புஷ்பலதா வித்யாலயாமந்திர் பள்ளி மாணவர் சூர்யா முதலிடமும், புஷ்பலதா பள்ளி மாணவர் அஸ்வின் இரண்டாமிடமும், பராசக்தி வித்யாலயா மாணவர் செய்யது ஹஜ் மூன்றாமிடமும் பெற்றனர்.ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவிகளுக்கான போட்டியில் பெல் பள்ளி மாணவிகள் அஸ்விதா மணியரேவி, கவினி முறையே முதல், இரண்டாமிடமும், ஜெயேந்திரா பள்ளி மாணவி பவித்ரா மூன்றாமிடமும் பெற்றனர். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கான போட்டியில் பெல் பள்ளி மாணவி சங்மித்ரா முதலிடமும், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவிகள் வதனா, ராசிகா முறையே இரண்டாம், மூன்றாமிடமும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு குற்றாலம் கலைவாணர் கலையரயங்கில் நடந்த விழாவில் பரிசு வழங்கப்பட்டது.
29-Sep-2025
25-Sep-2025