மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
ஆழ்வார்குறிச்சி:கடையம் முப்புடாதி அம்மன் திருக்கோயிலில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வளைகாப்பு வைபவம் நடக்கிறது.கடையத்தில் வடக்கு ரத வீதியில் முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடையம் நண்பர்கள் குழு சார்பில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஆடிப்பூர விழா நடக்க உள்ளது. ஆடிப்பூர விழாவில் காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, தொடர்ந்து ஆடிப்பூர கஞ்சி வழங்குதல் நடக்கிறது. மாலை 6 மணியளவில் 108 நெய்விளக்கு தீபம் ஏற்றுதலும், இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு வளைகாப்பு வைபவமும், இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.ஏற்பாடுகளை நண்பர்கள் குழுவினர் செய்துவருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025