மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் அனைவரும் சுவாசிக்க வேண்டும் என மாவட்ட மைய நூலகத்தில் நடந்த முப்பெரும் விழாவில் நெல்லை ஆர்டிஓ., ராஜகிருபாகரன் தெரிவித்தார்.அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், மைய வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, பாலகங்காதர திலகர் பிறந்த நாள் விழா மற்றும் கவிஞர் நெல்லை அருள்மணி நினைவு விழா என முப்பெரும் விழா மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் மரியசூசை தலைமை வகித்தார். செயலாளர் கணபதி சுபுபிரமணியன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன், துணை தலைவர் பிரபாகர், பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக நெல்லை ஆர்டிஓ., ராஜகிருபாகரன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது; காமராஜர், பாலகங்காதர திலகர், கவிஞர் நெல்லை அருள்மணி போன்றோரின் கருத்துக்களை நடைமுறையில் பின்பற்ற வேண்டும். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை போன்ற பல்வேறு பட்டங்கள் இருந்தாலும், வாசகர் எனுற பட்டமே அனைத்திலும் சிறந்ததாகும். வாசிக்கும் பழக்கத்தை நாம் அனைவரும் சுவாசிக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நூலகத்தில் உறுப்பினராகி பயன் பெற வேண்டும். தினமும் காலையில் உணவு சாப்பிடுவது போல் புத்தகம் படிப்பதையும் வழக்கமாக கொள்ள வேண்டும்.இவ்வாறு நெல்லை ஆர்டிஓ., ராஜகிருபாகரன் பேசினார்.நிகழ்ச்சியில் காமராஜரைப் பற்றி கண்ணபிரானும், பாலகங்காதர திலகரைப்பற்றி கணபதி சுப்பிரமணியனும், நெல்லை கவிஞர் அருள்மணி பற்றி புத்தனேரி செல்லப்பாவும் பேசினார்.நெல்லை கல்சுரல் அகாடமி பொறுப்பாளர்கள் சோனா.வெங்கடாசலம், காசிவிஸ்வநாதன், குணசேகரன், ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் முத்துசாமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இதில் வாசகர் வட்ட துணை செயலாளர்கள் அருணா சிவாஜி, சந்திரபாபு,பாலசுப்பிரமணியன், பரமேஷ்வரன், தியான மைய சங்கர், முதன்மை நூலகர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025