உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வட்டார வாலிபால் போட்டிதிருவேங்கடம் பள்ளி சாதனை

வட்டார வாலிபால் போட்டிதிருவேங்கடம் பள்ளி சாதனை

திருவேங்கடம்:வட்டார அளவிலான வாலிபால் போட்டியில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.கரிவலம்வந்தநல்லூர் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சங்கரன்கோவில் வட்டார உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளுக்கிடையே அரசு சார்பில் வாலிபால் போட்டி நடந்தது. இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இளையோர் பிரிவு மாணவர்கள் உமாசங்கர், ஜவகர்லால்நேரு, நத்தகுமார், முருகேஸ்வரன், அரசகுமார், ராகுல், மதன்குமார், சிவராமகிருஷ்ணன், சிவசுந்தர் முதலிடம் பெற்றனர். இதே விளையாட்டு போட்டியில் இப்பள்ளி மிக மூத்தோர் பிரிவு மாணவர்கள் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகியுமான பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ