உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / முதலியார்பட்டியில்நீர்தேக்க தொட்டி திறப்பு

முதலியார்பட்டியில்நீர்தேக்க தொட்டி திறப்பு

ஆழ்வார்குறிச்சி:முதலியார்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை எம்எல்ஏ ராஜேந்திரன் திறந்து வைத்தார்.கடையம் பஞ்., யூனியன் முதலியார்பட்டி காந்திநகரில் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது தொகை ரூ.2 லட்சம், பஞ்., நிதியில் இருந்து ரூ.1.34 லட்சம் ஆக மொத்தம் 3.34 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் காந்திநகர், இந்திரா நகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 320 குடும்பத்தினர் பயன்பெறுவர்.மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழாவிற்கு முதலியார்பட்டி பஞ்., தலைவர் பஸ்ரூர் ரஹ்மான் தலைமை வகித்தார். கடையம் ஒன்றிய ஆணையாளர் சிவகாமசுந்தரி வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் கல்யாணி ரத்தினசபாபதி, பஞ்.,உறுப்பினர் செய்யதலி முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.லிங்கம் வாழ்த்தி பேசினார். எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்து பேசினார். கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா நன்றி கூறினார்.விழாவில் கடையம் பெரும்பத்து பஞ்., தலைவர் அருவேல்ராஜ், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் எஸ்.வி.முருகேஷ், ராஜவேல், விவசாயிகள் சங்க செயலாளர் கசமுத்து, கோவிந்தபேரி இளங்கோ, முதலியார்பட்டி சங்கர், ஆம்பூர் பஞ்., தலைவர் ஈஸ்வரன், யூனியன் கவுன்சிலர் வன்னியநம்பி, கம்யூ.,கட்சி செயலாளர் வேலாயுதம், தெற்குகடையம் ராமதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழா ஒன்றிய செயலாளர் ஜீவா அருணாசலம் தலைமையில் நடந்தது. கிளை செயலாளர் லெட்சுமிசேகர், நூருல்அமீர், பஞ்., தலைவர் பஸ்ரூர் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை