உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பொட்டல்புதூரில்மூப்பனார் பிறந்த நாள்

பொட்டல்புதூரில்மூப்பனார் பிறந்த நாள்

ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூரில் மூப்பனார் பிறந்த தின விழா நடந்தது.பொட்டல்புதூர் சந்தை திடலில் நடந்த மூப்பனார் பிறந்த தின விழாவிற்கு வட்டார துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கடையம் வைகுண்டராஜன், சரவணன், பொட்டல்புதூர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். வெள்ளிகுளம் நடராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கப்பல்துறை ஆலோசகர் அமீர்கான், கடையம் ஒன்றிய கவுன்சிலர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினர்.மாவட்ட தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் அழகுதுரை, தெற்கு கடையம் இளைஞர் காங்., தலைவர் பாரதிராஜன், இபு, விநாயகதேவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மூப்பனார் படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி